செம்பியம் பகுதியில் முதியவர் கொலை வழக்கில் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் கைது.
K-1 செம்பியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட M.H ரோடு, கண்ணபிரான் கோயில் தெருவில் உள்ள பொது கழிப்பிடம் அருகே பிளாட்பாரத்தில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் தலையில் காயத்துடன் இறந்து கிடப்பதாக நேற்று (15.10.2021) இரவு 10.00 மணியளவில் கிடைத்த தகவலின் பேரில் K-1 செம்பியம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவிடத்திற்கு சென்று விசாரணை செய்து பிரேதத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் போலீசாரின் விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர், ஆதரவற்ற முதியவர் மூர்த்தி, வ/65, என்பது தெரிவந்தது. இது குறித்து K-1 செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
K-1 செம்பியம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து மேற்படி கொலை வழிக்கில் சம்பந்தப்பட்ட ஹேமந்த், வ/24, த/பெ.தனபால் ரெட்டி, எண்.9/423, லிங்கேஷ்வரன் நகர், வயலாபட்டினம், திருப்பதி, ஆந்திர மாநிலம் என்பவரை கைது செய்தனர். மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட ஹேமந்த் என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், இவர் கடந்த 2012 ம் ஆண்டு முதல் 2017 வரை 5 ஆண்டுகள் திருப்பதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் 2019 முதல் செப்டம்பர் 2021 வரை போரூர் மதனந்தபுரம் பகுதியில் உள்ள தனியார் மனநல காப்பகத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் ஹேமந்த் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மேற்படி மனநல காப்பகத்திலிருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறி சென்னையில் பல்வேறு பகுதிகளில் சுற்றி வந்ததும், சம்பவத்தன்று மேற்படி முதியவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளது தெரியவந்தது.
விசாரணைக்குப்பின்னர் கைது செய்யப்பட்ட ஹேமந்த் நீதிமன்றம் முன்பு ஆஜர் செய்ததில் மாஜிஸ்திரேட் அவர்கள் மேற்படி ஹேமந்த் என்பவரை விசாரணை செய்த பின்பு, சென்னை, கீழ்பாக்கம் அரசு மன நலகாப்பக மருத்துமனையில் அனுமதித்து மருத்துவ அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் மனநலம் பாதிக்கப்பட்ட ஹேமந்த் கீழ்பாக்கம் அரசு மனநல காப்பக மருத்துமனையில் அனுமதிக்கப்படவுள்ளார்.
