புறக் காவல் நிலையத்தை துவங்கி வைத்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப.,* அவர்கள் இன்று (16.10.2021) செட்டிபாளையம் காவல் நிலைய பகுதியில் உள்ள மலுமிச்சம்பட்டியில் புறகாவல் நிலையத்தை துவங்கி வைத்தார். இப்புறக்காவல் நிலையம் தொடங்கப்பட்டதன் நோக்கம் பொள்ளாச்சி, செட்டிபாளையம், மதுக்கரை மற்றும் பல்லடம்ரோடு ஆகிய நான்கு சந்திப்புகளில் நடக்கக்கூடிய சட்ட ஒழுங்கு பிரச்சனையை தீர்ப்பதற்காகவும், குற்றங்களை தடுப்பதற்காகவும், போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்துவதற்காகவும், மற்றும் சாலையில் ஏற்படும் விபத்துகளை குறைப்பதற்காகவும் பல நவீன வசதிகளை கொண்டு அமைக்கப்பட்ட புறக் காவல் நிலையத்தை துவங்கி வைத்தார். இப்புறக்காவல் நிலைய துவக்க விழாவில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. ரவிச்சந்திரன், கருமத்தம்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ஆனந்த் ஆரோக்கிய ராஜ், சூலூர் காவல் ஆய்வாளர் திரு. மாதையன், செட்டிபாளையம் உதவி ஆய்வாளர் திரு. மியாடிட் மனோ, தனிப்பிரிவு காவலர்கள், மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்புறக்காவல் கட்டிடம் அமைக்க உதவிய பொதுமக்கள் அனைவருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டி நன்றி தெரிவித்துள்ளார்.