அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் வசிக்கும் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி அழைத்துச் சென்ற 19 வயது நபர் கைது. சிறுமி மீட்பு
அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் வசிக்கும் 17 வயது சிறுமி, கடந்த 27.9.2021 அன்று காலை வழக்கம்போல அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பவில்லை என சிறுமியின் பெற்றோர் T-10 திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், சிறுமி காணவில்லை பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. T-10 திருமுல்லைவாயல் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்ததில், மேற்படி சிறுமி ஒரு வாலிபருடன் சென்றது தெரியவந்தது.
அதன்பேரில், காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு, காணாமல் போன மேற்படி சிறுமியை மீட்டு, அவரை அழைத்துச் சென்ற 19 வயது நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில், பிடிபட்ட நபர் அவரது 18 வயதில், மேற்படி சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்வதாகவும் கூறி அழைத்துச் சென்று வெளியூரில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்க வைத்து, பாலியல் உறவில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதன்பேரில், T-10 திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில், சிறுமி காணாமல் போன பிரிவில் பதிவு செய்யப்பட்ட மேற்படி வழக்கில், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் மாற்றம் செய்து, சிறுமியை அழைத்துச் சென்று பாலுறவில் ஈடுபட்ட 19 வயது நபரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 19 வயது நபர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.