நில அபகரிப்பு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட 4  குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது.  

2021ம் ஆண்டு இதுவரையில் தொடர்ச்சியாக பல்வேறு குற்றச் செயல்களில்  ஈடுபட்ட 319  குற்றவாளிகள் குண்டர்  தடுப்புக்  காவல் சட்டத்தில் கைது. 

 

  

    சென்னை பெருநகரில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும், பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும், தமிழக காவல் துறை தலைமை இயக்குநர்/சென்னை பெருநகர காவல் ஆணையாளர் (பொறுப்பு) திரு.C.சைலேந்திரபாபு, இ.கா.ப அவர்களின் உத்தரவின்பேரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், கொலை, கொலை முயற்சி குற்றங்களில் ஈடுபடுபவர்கள், திருட்டு, செயின் பறிப்பு, சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், போதைப் பொருட்கள் கடத்துபவர்கள், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு மிரட்டி பணம் பறிப்பவர்கள், நில அபகரிப்பு, ஆபாச வீடியோ தயாரிப்பு, மணல் கடத்தல், உணவு பொருட்கள் கடத்தல், போக்சோ மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள், கொரோனா நோய் பாதிப்பில் உயிர் காக்கும் மருந்துகளை பதுக்கி விற்பவர்கள் ஆகியோரை தீவிரமாக கண்காணித்து குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கடந்த 01.01.2021 முதல்  15.10.2021 வரையில் சென்னை பெருநகரில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 202 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 70 குற்றவாளிகள், சைபர் குற்றம் சார்ந்த வழக்குகளில் ஈடுபட்ட 18 குற்றவாளிகள், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தியும், விற்பனை செய்த 18 குற்றவாளிகள், உணவு பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 5  குற்றவாளிகள், கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் ரெம்டெசிவர் மருந்தை பதுக்கி வைத்து விற்ற 4 குற்றவாளிகள், போக்சோ மற்றும் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட 2 குற்றவாளிகள் என மொத்தம் 319 குற்றவாளிகள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 இதனை தொடர்ந்து 1.அருண்குமார் (எ) பச்சை, வ/23, த/பெ.சங்கர், எண்.21, காந்தி தெரு, பாரதியார் நகர், குன்றத்தூர், என்பவர் வழிப்பறி குற்றங்களில் ஈடுபட்டதற்காக,                  T-13 குன்றத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார். இவர் மீது சுமார் 6 குற்ற வழக்குகள் உள்ள நிலையில், ஏற்கனவே ஒரு தடவை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2.பிரதீப்ராஜ், வ/23, த/பெ.ஆனந்தன், எண்.294, அன்புநகர் 4வது குறுக்கு தெரு, திருவேற்காடு என்பவர் வழிப்பறி மற்றும் அடிதடி குற்றங்களில் ஈடுபட்டதற்காக, T-5 திருவேற்காடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார். இவர் T-5 திருவேற்காடு காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது 2 கொலை முயற்சி வழக்குகள் உட்பட சுமார் 13 குற்ற வழக்குகள் உள்ள நிலையில், ஏற்கனவே ஒரு தடவை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 3.இன்பமதிவதணன், வ/36, த/பெ.யேசுராஜா, திருவள்ளுவர் தெரு, புத்தகரம், சென்னை, 4.டேவிட் வேல்ஸ், வ/27, த/பெ.இஸ்ரேல், திருவள்ளுவர் தெரு, புத்தகரம், சென்னை ஆகிய இருவரும் சேர்ந்து சென்னை புறநகர் பகுதியிலுள்ள பல நபர்களின் நிலத்தை ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்தது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு, நில அபகரிப்பு பிரிவில் வழக்குப் பதிவு செய்து, இருவரும் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

மேற்படி குற்றவாளிகளின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த, குற்றவாளி அருண்குமார் (எ) பச்சை என்பவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய                             T-13 குன்றத்தூர் காவல் ஆய்வாளரும், குற்றவாளி பிரதீப்ராஜ் என்பவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய T-5 திருவேற்காடு காவல் ஆய்வாளரும், இன்பமதிவதணன் மற்றும் டேவிட் வேல்ஸ் ஆகிய இருவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய, மத்திய குற்றப்பிரிவு நில அபகரிப்பு தடுப்பு காவல் ஆய்வாளரும் பரிந்துரை செய்ததின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மேற்படி                                          4 குற்றவாளிகளையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய 12.10.2021 அன்று உத்தரவிட்டார். அதன்பேரில், மேற்படி 4 குற்றவாளிகளும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்,

மேலும் கடந்த 09.10.2021 முதல் 15.10.2021 வரையிலான ஒரு வாரத்தில்                                            வழிப்பறி மற்றும் அடிதடி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட 02 ரௌடிகள் மற்றும் நில அபகரிப்பு குற்றங்களில் ஈடுபட்ட 02 குற்றவாளிகள் என மொத்தம் 04 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

    எனவே பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள், கொலை, கொலை முயற்சி, திருட்டு குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல், உயிர்காக்கும் மருந்துகள், போதை மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் பதுக்கி வைத்து விற்பவர்கள் மீது தொடர்ந்து கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *