ஆதம்பாக்கம் பகுதியில் சரித்திர பதிவேடு குற்றவாளி நாகூர் மீரான் என்பவரை கத்தியால் தாக்கி கொலை செய்த வழக்கில் பெண் உட்பட 9 நபர்கள் கைது.
சென்னை, மேடவாக்கம், சந்தோஷ்புரம், விக்னராஜபுரத்தில் வசித்து வந்த நாகூர் மீரான், வ/29, த/பெ.யூசுப், என்பவர் S-8 ஆதம்பாக்கம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது S-8 ஆதம்பாக்கம், S-1 புனித தோமையர்மலை, S-10 பள்ளிக்கரணை மற்றும் R-7 கே.கே.நகர் ஆகிய காவல் நிலையங்களில் 2 கொலை வழக்குகள், 3 கொலை முயற்சி வழக்குகள் உட்பட சுமார் 15 குற்ற வழக்குகள் உள்ள நிலையில், ஏற்கனவே குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாகூர் மீரான், நேற்று முன்தினம் (14.10.2021) மாலை, ஆதம்பாக்கம், டாக்டர் அம்பேத்கர் நகர் 3வது தெருவிலுள்ள அவரது தோழி லோகேஸ்வரி என்பவரின் வீட்டிற்கு சென்றிருந்தபோது, சுமார் 8 பேர் கொண்ட கும்பல் திடீரென லோகேஸ்வரியின் வீட்டிற்குள் புகுந்து, நாகூர் மீரானை கத்தியால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இது குறித்து S-8 ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர்.
S-8 ஆதம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு, மேற்படி கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 1.சீனு (எ) சீனிவாசன், வ/39, த/பெ.ஏழுமலை, டாக்டர் அம்பேத்கர் நகர் 3வது தெரு, ஆதம்பாக்கம், சென்னை, 2.சாமுவேல், வ/22, த/பெ.வெங்கடேசன், டாக்டர் அம்பேத்கர் நகர் 3வது தெரு, ஆதம்பாக்கம், 3.காணிக்கைராஜ், வ/23, த/பெ.ஆரோக்கியதாஸ், நெருப்புமேடை, குன்றக்குடி நகர், ஆதம்பாக்கம்,4.விமல்ராஜ், வ/23, த/பெ.முரளி, பெரியார் நகர் 1வது தெரு, ஆதம்பாக்கம் 5.பிரபாகரன், வ/23, த/பெ. மணி, எண்.9/12, வெள்ளாளர் தெரு, 1 வது மெயின் ரோடு, ஆதம்பாக்கம், சென்னை 6.கார்த்திக் (எ) இருளகார்த்திக், வ/26, த/பெ. ரகு, ஏரிக்கரை தெரு, ஆதம்பாக்கம், சென்னை ஆகிய 6 நபர்களை நேற்று (15.10.2021) மாலை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மேற்படி சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான 1.ராபின், வ/27, த/பெ.அருள், டாக்டர் அம்பேத்கர் நகர், ஆதம்பாக்கம், சென்னை 2.பவுல்ராஜ், வ/22, த/பெ.சேது, டாக்டர் அம்பேத்கர் நகர் 3வது தெரு, ஆதம்பாக்கம், சென்னை மற்றும் குற்றவாளிகளுக்கு தகவல் கொடுத்த லோகேஸ்வரி, வ/27, க/பெ.வடிவேல், எண்.575, டாக்டர் அம்பேத்கர் நகர், 3 வது தெரு, ஆதம்பாக்கம், சென்னை ஆகிய மூவரை இன்று (16.10.2021) கைது செய்தனர்.
மேலும் விசாரணையில் கொலையுண்ட நாகூர்மீரானுக்கும், ராபின் என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன்காரணமாக ராபின் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து நாகூர்மீரானை கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளது தெரியவந்தது. ராபின் மீது 1 கொலை வழக்கு மற்றும் 3 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 15 வழக்குகள் உள்ளது தெரிவந்தது.
விசாரணைக்குப்பின்னர் கைது செய்யப்பட்ட 9 நபர்களும் நீதிமன்றத்தில் இன்று ( 16.10.2021) ஆஜர் செய்யப்படவுள்ளனர்.