முதியவரிடம் வழிப்பறி செய்த  3 நபர்கள்  கைது.  1 செல்போன் மற்றும் ரொக்கம் ரூ. 2,000/-  பறிமுதல்.  

 

         சென்னை,  கிழக்கு தாம்பரம், கணபதிபுரம், அசோக்நகர், எண்.9 என்ற முகவரியில் வசித்து வரும் மீன்வியாபாரி ரங்கராஜ், வ/71, த/பெ.ஶ்ரீரங்கம் என்பவர்   நேற்று  (15.10.2021) மதியம் சுமார் 03.00 மணியளவில்  தாம்பரம் பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த 3 நபர்கள் மேற்படி ரங்கராஜை மிரட்டி அவரிடமிருந்து 1 செல்போன் மற்றும் பணம் ரூ.2,500/- பறித்துகொண்டு தப்பிச்சென்றனர். இது குறித்து ரங்கராஜ் S-11 தாம்பரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்  பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.

S-11 தாம்பரம்  காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்தின் அருகில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும், தீவிர தேடுதலில் ஈடுபட்டும், மேற்படி  வழிப்பறிசம்பவத்தில் ஈடுபட்ட 1.ரமேஷ், வ/21, த/பெ.குருசாமி,  பிள்ளையார் கோயில் தெரு, கன்னடபாளையம்,  மேற்கு தாம்பரம் 2. மணிகண்டன் (எ) ஆடு, வ/23, த/பெ.மணி, எண்.52, ஸ்டேசன் ரோடு, பெருஙகளத்தூர், செங்கல்பட்டு மாவட்டம் 3.கார்த்திக், வ/26, த/பெ.முரளி, எண்.112, திருவள்ளுவர் தெரு, மெட்டுக்குளம், கோயம்பேடு, சென்னை ஆகிய மூவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து                                1 செல்போன் மற்றும் ரூ.2,000/- பறிமுதல்  செய்யப்பட்டது.  மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட  ரமேஷ் மீது 1 போக்சோ வழக்கும், கார்த்திக் மீது 1 கொலை முயற்சி வழக்கு உட்பட 2 வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.

 கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *