உலக சுகாதார அமைப்பால் வருடம் தோறும் அக்டோபர் 15 ஆம் தேதி உலக கை கழுவும் நாளாக பொதுமக்களுக்கு நோய்கள் குறித்த விழிப்புணர்வு கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம் போடி ஜ.கா.நி மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு கைகளை எப்படி சுத்தமாக கழுவ வேண்டும் எனவும் நோய்களில் இருந்து எப்படி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ராமசுப்பிரமணி அவர்கள் மாணவி களிடையே உரையாற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.