ஜம்மு & காஷ்மீரில் இளம் தொழில்முனைவோருடன் உரையாடிய மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன், புதிய இந்தியாவுக்கு இளைஞர்கள் பங்காற்றி வருவதாக பெருமிதம்
ஜம்மு & காஷ்மீருக்கான மக்கள் தொடர்பு திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு & பால்வளம் இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் இன்று ஸ்ரீநகர் சென்றடைந்தார்.
பின்னர் ஜம்மு & காஷ்மீரில் உள்ள ஷோபியானுக்கு சென்ற இணை அமைச்சர், மக்களுடன் உரையாடியதோடு, பிரதமரின் மத்சய சம்பதா திட்ட பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கினார்.
பிரதமரின் மத்சய சம்பதா திட்டத்தின் கீழ் இளம் தொழில்முனைவோர் திருமிகு ஹினா பரேவால் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபுராவில் உருவாக்கியுள்ள ரீ-சர்க்குலேட்டரி அக்வாகல்ச்சர் அமைப்பை டாக்டர் எல் முருகன் திறந்து வைத்தார்.
“இளைஞர்கள் இவ்வாறாக புதிய இந்தியாவுக்கு பங்காற்றி வருகின்றனர். திருமிகு ஹினா பரே ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களுக்கு வளர்ச்சி பாதையின் ஊக்கமாக திகழ்கிறார்,” என்று அவர் கூறினார்.
திருமிகு ஹினா பரேவுடன் உரையாடிய அமைச்சர், தற்சார்பு இந்தியாவை கட்டமைப்பதற்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களின் கீழ் வளர்ச்சி பாதையில் இணைய மக்களுக்கு அவர் ஊக்கமளித்து வருவதாக கூறினார்.
***