சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் துவக்கி வைத்த பெண் காவலர்களுக்கான சமநிலை வாழ்வு முறை (WORK LIFE BALANCE) சிறப்பு பயிற்சி வகுப்பில் காவல் இணை ஆணையாளர் (தலைமையிடம்) கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

 


சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்கள், சென்னை பெருநகர காவல்துறையில் சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, மத்திய குற்றப்பிரிவு மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் பெண் காவலர்கள் முதல் பெண் காவல் ஆய்வாளர்கள் வரையிலான சுமார் 4,800 பெண் காவல் ஆளிநர்களுக்கு, காவல் பணியிலும் வாழ்க்கையிலும் திறம்பட செயல்பட்டு வெற்றி பெற வாழ்க்கையிலும் வேலையிலும் சமநிலை வாழ்வு முறை (Work Life Balance) என்ற 3 நாட்கள் சிறப்பு பயிற்சி முகாமினை, 24.09.2021 அன்று துவக்கி வைத்தார்.
இப்பயிற்சி முகாம் வாரந்தோறும் வெள்ளி. சனி மற்றும் ஞாயற்றுக்கிழமை ஆகிய 3 நாட்களுக்கு ஒரு குழு (பேட்ச்) என 64 குழுக்களுக்கு என4,800 பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டுமிடப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இப்பயிற்சி வகுப்பில், பெண் காவலர்கள் பணியிலும், குடும்ப வாழ்விலும் திறம்பட செயல்பட்டு வெற்றி பெறுவதற்காக Self Image, Self Motivation and Happiness, Health, Positive Emotions and Calmness, Managing Relationship with Ease, Facing Work Challenges, Work life balance, Time Management, Yoga, Pennalam ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், பெண் காவல் ஆளிநர்களுக்கு பயிற்சி வகுப்புடன் அவர்களுக்கு கண்(Eye), காது, மூக்கு, தொண்டை (ENT), இரத்த அழுத்தம்(BP), நீரிழிவு, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் (Uterus Cancer) மற்றும் மார்பக புற்றுநோய் (Breast Cancer) உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகளும் நடத்தப்பட்டு வருகிறது.
இப்பயிற்சி வகுப்பின் 3வது பேட்ச் வகுப்பின் 2வது நாளான இன்று (09.10.2021) மதியம், புதுப்பேட்டை ஆயுதப்படை துணை ஆணையாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற பயிற்சியில், டாக்டர்.ராஜன் முத்துகிருஷ்ணன், ZEAL & IATD பயிற்சி மையத்தின் நிறுவுனர், பெண்கள் நலம் குறித்த கூட்டுக்குழு பயிற்சி வகுப்பினை நடத்தினார். காவல் இணை ஆணையாளர் (தலைமையிடம்) திருமதி.B.சாமுண்டீஸ்வரி, இ.கா.ப., அவர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *