தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், மன்றத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள தலைவர் , மற்றும் செயலர் , புதிய உறுப்பினர்களை சந்தித்து, வாழ்த்து தெரிவித்து தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்கம் சார்பாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது..
தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்கம் சார்பாக அதன் தலைவர் தங்கவேல் தலைமையில், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மன்றத்தின் செயலாளராக பொறுப்பேற்றுள்ள பேராசிரியர் முனைவர் . மு.இராமசாமி சந்தித்தனர்.இந்த சந்திப்பின் போது,நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்களின் நல் வாழ்விற்க்காக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.. சென்னையில் உள்ள தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நாட்டுப்புற கலைஞர்களின் உரிமைக்காக கோவை மாவட்ட அனைத்து கலைஞர்களின் சார்பில்..பி.வி.சண்முகம். ஏ.ஆர்.அனில்குமார்,. ஜெயந்தி ஆனந்தகுமார் தலைமையில்.. நடிகர் சங்க தலைவர்.சாகுல் ஹமீது… நாட்டுப்புற நாதஸ்வர சங்க தலைவர்.ஆண்டவர்… உட்பட பல கலைஞர்கள் கலந்து கொண்டனர்.அனைத்து கலைஞர்களுக்காக வழங்கப்பட்ட கோரிக்கை மனுவில் நலிவுற்ற நாட்டுப்புற கலைஞர்களுக்கு வழங்க கூடிய உரிய நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் எனவும், தேர்தல் வாக்கிறுதியின் போது கலைஞர்களின் சார்பாக கொடுக்கப்பட்ட பதினாறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கூறினார்.இந்த சந்திப்பின் போது கோவை,மதுரை,தஞ்சை,திருவாரூர்,திருநெல்வேலி என 38 மாவட்டங்களை சேர்ந்த தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்கம் , மாநில நிர்வாகிகள் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்…