காவல்துறை அலட்சியம் குடும்பத்துடன் கண்ணீர் மனு

 

கடத்தப்பட்ட எனது மகளை மீட்டுத் தாருங்கள் என்று திருவண்ணாமலை எஸ்பியிடம் பெற்றோர் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.திருவண்ணாமலை மாவட்டம்கேட்டவரம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (45).இவரது மனைவி சக்தி (40).
இவர் நேற்று திருவண்ணாமலை எஸ்பி பவன்குமாரிடம் கண்ணீர் மல்க ஒரு மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது; நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். எனது இளைய மகளுக்கு 20 வயதாகிறது. பிகாம் பட்டப்படிப்பு முடித்து வீட்டில் இருந்து வந்தார். வீட்டிலிருந்த எனது எனது இளைய மகளை கடந்த 9ஆம் தேதி முதல் வீட்டில் இருந்து காணவில்லை. உறவினர் வீடு, அக்கம்பக்கம் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து விசாரித்தபோதுஎனது மகளை எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள கேட்டவரம்பாளையம் பழைய காலனி பகுதியை சேர்ந்த ரங்கநாதன் என்பவரின் மகன் நவீன் குமார் (20) இருசக்கர வாகனத்தில் கடத்தி
சென்றதாக அறிந்தேன். இதுகுறித்து ரங்கநாதனிடம் கேட்டதற்கு அவர் அலட்சியமாகப் பதில் சொல்கிறார். ஒன்றுமறியா எனது மகளுக்கு ஆசை வார்த்தை கூறி பழகி, அவளை மிரட்டி கடத்திச் சென்றுள்ள‌ எனது மகளை கண்டுபிடித்துநவீன் குமாரிடமிருந்து
மீட்டுத்தருமாறுருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இது குறித்து கடலாடி காவல் நிலையத்திலும், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடமும் புகார்கொடுத்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே திருமண வயது நிரம்பாத
நவீன்குமாரை அழைத்து விசாரணை நடத்தி சட்டரீதியான நடவடிக்கை எடுத்து
எனது மகளை மீட்டுத்தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள்காவல்துறை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குடும்பத்துடன் தீக்குளிப்போம் என தெரிவித்தனர்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 5107