வயதாகிக்கிட்டே போகுது..

பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்யுங்கள்…

முதல்வர் ஸ்டாலினுக்கு சமூக வலைதளம் மூலம் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் கூறியதாவது:

2012 ஆம் ஆண்டில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா 16ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணி அமர்த்தினார்.

இவர்கள் விளையாட்டு ஓவியம் கணினி இசை தையல் தோட்டக்கலை கட்டிடக்கலை வாழ்க்கைகல்வி ஆகியவற்றை மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார்கள்.

இவர்களை பணியில் அமர்த்தும்போது ரூ.5ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்பட்டது.

10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக அரசு இவர்களை காலமுறை சம்பளத்தில் பணி நிரந்தரம் செய்யாமல் ரூ.10ஆயிரம் சம்பளம் மட்டுமே வழங்கினார்கள்.

இந்த 16ஆயிரம் பேரில் மரணம் பணிமூப்பு என 4ஆயிரம் காலியிடங்கள் ஆகிவிட்டது.

தற்போது 12ஆயிரம் பேர் மட்டுமே வேலை செய்கிறார்கள்.

இவர்களில் பலர் 50 வயதை தாண்டி விட்டார்கள்.

மற்றவர்கள் இன்னும் சில ஆண்டுகளில் பணிமூப்பு வயதை எட்டிவிடும் நிலையில் கவலையில் உள்ளார்கள்.

தொகுப்பூதியத்திலே இதுவரை தொடருவதால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றார்கள்.

இந்த நிலையில் திமுக இவர்களை நிரந்தரம் செய்வதாக தேர்தலில் வாக்குறுதி கொடுத்தது.

தற்போது தி.மு.க., ஆட்சிக்கு வந்ததையடுத்து பணிநிரந்தரம் செய்வார்கள் என காத்திருக்கிறோம்.

இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.

குடும்பத்தை நடத்த முடியாமல் மன உளைச்சலில் உள்ளோம்.

10 ஆண்டுகள் கடந்து விட்டதால் இப்பணியில் இருந்தவர்கள் பலர் வயதாகி இறந்தனர்.

மீதமுள்ளவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

எங்களுக்கும் வயதாகிக்கொண்டே போகிறது.

கலைஞர் ஆட்சியில் பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் பலவகை பகுதிநேர பணியாளர்களை நிரந்தரம் செய்தார்.

அதைப்போலவே முதல்வர் ஸ்டாலின் அவர்களும் எங்களுக்கு பணிநிரந்தரம் வழங்க முதல்வர் ஸ்டாலினுக்கு சமூக வலைதளம் மூலம் கோரிக்கை விடுத்து வருகிறோம் என்றார்.

இங்கனம் :-

சி. செந்தில்குமார்

மாநில ஒருங்கிணைப்பாளர்

தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு

செல் : 9487257203

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 5107