கொருக்குப்பேட்டை பகுதியில் வயதான பெண்மணியின் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்ற குற்றவாளி கைது.

4 ½ சவரன் தங்கச்சங்கிலி மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல்

 

 

சென்னை, கொருக்குப்பேட்டை, இளைய முதலி தெருவில் வசித்து வரும் வசந்தா, பெ/வ.68, க/பெ.வெங்கடரமணய்யா என்பவர் நேற்று (06.7.2021) மாலை சுமார் 04.00 மணியளவில், கொருக்குப்பேட்டை, இராமானுஜம் கூடம் சந்தில் சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர் வசந்தாவின் கழுத்திலிருந்த 4 ½ சவரன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினார். இது குறித்து வசந்தா, H-4 கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

H-4 கொருக்குப்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தும், அப்பகுதியில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளில் உள்ள குற்றவாளி மற்றும் அவரது இருசக்கர வாகனத்தின் அடையாளங்களை வைத்தும், மேற்படி சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளி ரமேஷ், வ/40, த/பெ.ஜோசப், எண்.52/26, MCM கார்டன் முதல் தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை என்பவரை நேற்று (06.7.2021) இரவு கைது செய்தனர். அவரிடமிருந்து புகார்தாரரின் 4 ½ சவரன் தங்கச்சங்கிலி மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணைக்குப் பின்னர் எதிரி ரமேஷ் இன்று (06.7.2021) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

 

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 4613