புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக்சோ சட்டத்தில் கைது.

 

புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் வசிக்கும் 8 வயது சிறுமி விளையாட சென்றிருந்தபோது, அவர் குடும்பத்திற்கு அறிமுகமான ஒரு நபர் சிறுமியை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டபோது, சிறுமி அழுது கொண்டே அவரது தாயிடம் கூறியுள்ளது. இது குறித்து சிறுமியின் தாய் W-16 புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.

W-16 புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் குற்றம் சாட்டப்பட்ட டில்லிபாபு, வ/34, த/பெ.ரகுபதி, எண்.8ஏ, கந்தன் தெரு, அருந்ததியர் நகர், மேட்டுப்பாளையம், ஓட்டேரி, சென்னை பிடித்து விசாரணை செய்ததில், டில்லிபாபு மேற்படி சிறுமியிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டது உண்மையென தெரியவந்தது.

அதன்பேரில், காவல் குழுவினர் எதிரி டில்லிபாபுவை போக்சோ சட்டத்தில் கைது செய்து, விசாரணைக்குப் பின்னர் நேற்று (06.7.2021) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவுப்படி டில்லிபாபுவை சிறையில் அடைத்தனர்.

 

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 4613