மடிப்பாக்கம் பகுதியில் நண்பரை அழைத்துச் சென்று கட்டையால் தாக்கிய சகோதரர்கள் உட்பட 3 நபர்கள் கைது.

2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சென்னை, பழைய பல்லாவரம், வாத்தியார் மாணிக்கம் தெருவில் வசித்து வரும் நவீன்குமார், வ/23, த/பெ.லோகநாதன் என்பவர் மடிப்பாக்கம், ஐயப்பா நகர் 8வது தெருவில் சிற்றுண்டி கடை நடத்தி வருகிறார். நவீன்குமார் கடந்த 05.07.2021 அன்று இரவு சுமார் 09.45 மணியளவில் கடையிலிருந்தபோது, அவரது நண்பர்கள் வினோத், ரஞ்சித் மற்றும் ஹரிஹரன் ஆகியோர் 2 இருசக்கர வாகனங்களில் கடைக்கு வந்து, நவீன்குமாரை அழைத்துச் சென்று கத்தி மற்றும் கட்டையால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். நவீன்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இச்சம்பவம் குறித்து S-7 மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.

S-7 மடிப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்திற்கு சென்று தீவிர விசாரணை செய்து, மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட 1.வினோத், வ22, த/பெ.சந்திரன், RMK சோழா கார்டன், திருவேற்காடு, சென்னை, இவரது சகோதரர் 2.ரஞ்சித், வ/24, த/பெ.சந்திரன், 3.ஹரிஹரன், வ/19, த/பெ.குணசேகர், பாலாஜி நகர், வேப்பம்பட்டு, திருநின்றவூர் ஆகிய 3 நபர்களை நேற்று (6.7.2021) கைது செய்தனர். அவர்களிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்கள், 1 கத்தி மற்றும் கட்டை பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில், கைது செய்யப்பட்ட நபர்கள் நவீன்குமாரின் நண்பர்கள் என்பதும், வினோத்தின் காதலி சில நாட்களாக சரிவர பேசாமல் தவிர்த்து வந்ததால், நவீன்குமார் அவரது வீட்டினருகில் வசிக்கும் வினோத்தின் காதலியிடம் வினோத் குறித்து தவறுதலாக கூறியுள்ளதாக நினைத்து, வினோத் அவரது சகோதரர் ரஞ்சித் மற்றும் உறவினர் ஹரிஹரன் ஆகியோருடன் சேர்ந்து மேற்படி தாக்கதல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

விசாரணைக்குப் பின்னர் எதிரிகள் மூவரும் நேற்று (06.7.2021) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 4613