கண்காணிப்பு பணியில் ஊர்காவல் படை தீவிரம்

கண்காணிப்பு பணியில் ஊர்காவல் படை தீவிரம் உலகையே அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் தடுக்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மருத்துவர், திரு.அருண் சக்திகுமார் அவர்களின் உத்தரவின் பேரில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு, தனிமைப்படுத்தப்பட்ட நபர்களை கண்காணிக்கும் பொருப்பில், கண்காணித்தல் மற்றும் பொதுமக்களை விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுதல் போன்றவற்றில் 250 க்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். ஊர்காவல் படையினரின் பணிகளை மேற்பார்வையிட்டு ஆய்வுசெய்த ஊர் காவல்படை வட்டார தளபதி பேராசிரியர் முனைவர் S.அழகுமணியன் மற்றும் துணை வட்டார தளபதி கூறுகையில் இந்திய தேசம் ஒருங்கிணைந்து கொரோனாவை எதிர்கொள்ளும் இயக்கத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஊர்க்காவல் படையினரும், காவல்துறையினரும் இணைந்து தன்னலம் கருதாமல் பொது மக்களின் நலன் மட்டும் கருதி பணியில் ஈடுபட்டனர் என்றனர். மக்கள்…

Read More

Lpf தொழிலாளர் கோரிக்கை

    Lpf தொழிலாளர்களுக்கு மாதவரம் ஆவின் பால் பண்ணை ஊழியர்களுக்கு சம்பளத்துக்கு அதிகமாக பணம் தருவதாக சொன்னார்கள் இதுவரை அவர்களுக்கு பணம் வரவில்லை என்று கோரிக்கை வைத்துள்ளார்,

Read More

பத்திரிகையாளர்கள்களுக்கு யார் உதவி செய்ய போகிறீர்கள்??

தமிழகம் முழுவதும் பாதுகாப்பு இல்லாத நிலையில் வியாதிகளை எதிர்கொண்டு வரும் பத்திரிகையாளர்கள் ! பாதுகாப்பு கவசம் இல்லை, எந்த ஒரு உதவித் தொகையும் இல்லை. கொரோனா தொற்று பரவும் நிலையிலும் பல பத்திரிகையாளர்கள் தங்கள் கடமைகளை சிறப்பாக செய்து வருகின்றனர், இந்த நிலையில் கூட அரசு எந்த ஒரு உதவியும் செய்ய முன்வரவில்லை. எல்லா மாவட்டத்திலும் இதே நிலைதான்், மத்திய மாநில அரசுகளுக்கு பத்திரிகையாளர்களின் உதவி மட்டுமே தேவைப்படுகிறது. நிர்வாகத்தின் உதவிகள் கூட அனைவருக்கும் கிடைப்பது இல்லை. இந்த நிலையில் எந்த ஒரு உதவியும் கிடைக்காத நிலையில், பாதுகாப்பு உபகரணங்கள் கூட தரமுடியாத, கொரோனா வைரஸ் நம்மை மட்டுமே பாதித்தால் பரவாயில்லை, நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் பாதிக்கும் நிலையில் நம்முடைய குடும்ப உறுப்பினர்களையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. பணி பாதுகாப்பு இல்லாத நிலையில் இன்று உயிர் பாதுகாப்பு…

Read More

இலவச பொருட்கள் சத்தரை ஊராட்சியில் வழங்கப்பட்டது,

சத்தரை ஊராட்சியில் கொரோனா வைரஸ் காரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் சார்பில் 1000 மற்றும் இலவச பொருட்கள் வழங்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில் பொது மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் வகையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூபாய் ஆயிரமும் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை,சமையல் எண்ணெய் ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதைத்தொடர்ந்து நேற்று திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் சத்தரை கிராமத்தில் தமிழக அரசின் சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 மற்றும் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடம்பத்தூர் ஒன்று குழு தலைவர் சுஜாதா…

Read More

ஒரிசாவில் இருந்து நடந்தே வந்த தமிழ்மக்களுக்கு பாடியநல்லூர் எஸ். முருகன் விருந்து கொடுத்தார்,

    தர்மபுரியை சேர்ந்த 17தமிழ் மக்கள் ஒரிசா கல்குவாரியில் வேலை செய்து   வந்தனர் ஊரடங்கு உத்தரவினால் அவர்கள் வேலை பாதிப்படைந்தது இதனால் ஒரிசாவில் இருந்து நடந்தே வந்த தமிழ்மக்களுக்கு மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா உபயோகப்படுத்திய வாகனத்தை உபயோகப்படுத்தும் அம்மாவின் விசுவாசி சோழவரம் ஒன்றியம் இளைஞர் அணி இளம்பெண் ஒன்றிய அவைத்தலைவர் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பாடியநல்லூர் சார்ந்த எஸ். முருகன் இதை அறிந்தவுடன் தருமபுரி தமிழ் மக்களுக்கு பாடியநல்லூர்அரசுபள்ளியில் அவர்களுக்கு உணவு அளித்தார் பின்னர் வருவாய்துறை மற்றும் காவல் அதிகாரியிடம் ஒப்படைத்தார்

Read More

கொரோனா வராமல் தடுக்க பத்திரிகையாளர் ஒன்று சேர்ந்து கிருமி நாசினி தெளித்தனர்,

தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் முனைவர் க.குமார் அவர்களின் ஆணைகினங்க மாநில சட்ட ஆலோசகர் திரு.v.a. விஜயசங்கர் அவர்களின் ஆலோசனையில் மத்திய சென்னை தலைவர் திரு.ஜீவானந்தம் தலைமையில் கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க மத்திய சென்னை பொறுப்பாளர்கள் சென்னை மாநகராட்சி மண்டல அதிகாரிகளை தொடர்பு கொண்டு நோய் தொற்றின் அவசியத்தை தெரிவித்து *ரெட் அலர்ட்* கொடுக்கப்பட்ட பகுதியான அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனி பகுதியில் தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் உதவியோடு எம்.எம்.டி.ஏ காலனி வாட்டர் டேங்க் முதல் பேருந்து நிறுத்தம் வரை தெரு தெருவாக கிருமி நாசினி சென்னை மாநகராட்சி குடிநீர் வாரியம் ஜெட் லாரியின் மூலம் தெளிக்கபட்டது. மேலும் சென்னை மாநகராட்சி…

Read More

அம்மா உணவகங்களில் உணவு அருந்தினார் முதல்வர்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று (1.4.2020) மயிலாப்பூர் காமராசர் சாலை மற்றும் பட்டினப்பாக்கத்தில் இயங்கி வரும் அம்மா உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டு, உணவருந்த வந்த பொதுமக்களிடம் உணவின் சுவை மற்றும் தரம் குறித்து கேட்டறிந்தார்.

Read More

கையில் தடியை எடுக்காமல் காவல்துறையினர் விசித்திர தண்டனை? Strange punishment of the police for not taking the rod in hand?

சென்னையில் அவிழ்த்து விட்ட காளைகள் போல வீதியில் அனாவசியமாக சுற்றித்திரிந்த தம்பிகளை மடக்கிய போலீசார் அவர்களை, ஒற்றைக்காலில் நிற்க வைத்தும், மூச்சிரைக்க ஓட வைத்தும் நெம்பி எடுத்தனர். ஒற்றைக்காலில் நின்றால் கொரோனா வராதா? என்ற கேள்விக்கு போலீசார் அளித்த வினோத பதில் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.. ஊரடங்கிற்கு கட்டுப்படாமல் தமிழகத்தில் இருசக்கர வாகனத்திலும், கூட்டாளிகளுடனும் காலநேரமின்றி அவிழ்த்து விட்ட காளைகள் போல சுற்றித்திரிந்த தம்பிகளை விசித்திரமான தண்டனை வழங்கி போலீசார் நெம்பி எடுத்தனர். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரம் அருகே சிக்கிய 3 ஊர்சுற்றிகளை தவளை போல தாவிச்சென்று தூரத்தில் நிற்கும் லாரியைத் தொடும் தண்டனை வழங்கப்பட்டது. சென்னை, திருவொற்றியூரில் சிக்கிய தம்பிகளை ஒற்றை காலில் நிற்க வைத்து நூதன வைத்தியம் செய்த காவல்துறையினர் அவர்களுக்கு கொரோனா நோய் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தினர். அப்போது ஒற்றைக்கால்…

Read More

டெல்லி மாநாட்டில் அதிர்ச்சி முழு தகவல்? Full information on shock at Delhi conference?

  டெல்லி: 2 ஆயிரம் பேர் பங்கேற்ற மத நிகழ்ச்சியில் 200 பேருக்கு கொரோனா அறிகுறிகள்… அதிர்ச்சி தகவல்._ டெல்லியின் நிசாமுதின் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் கடந்த 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை இஸ்லாமிய மத குருக்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. அதில் தமிழகம், தெலுங்கானா, காஷ்மீர் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், மலேசியா, சவுதி அரேபியா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 200-க்கும் அதிகமான வெளிநாட்டினரும் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் பலர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் பங்கேற்ற நபர்களில் பலருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Read More